வெள்ளகோவில்; ஆடுகளை கடிக்கும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை
Tirupur News- வெள்ளக்கோவில் பகுதியில், தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் பகுதியில் ஆடுகளைக் கடிக்கும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என, ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் போ் விவசாயம் செய்து வருகின்றனா். உப தொழிலாக கறவை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வளா்க்கப்படுகின்றன. அப்பகுதியில் கால்நடை வளர்ப்பு, உபரி வருமானம் தரும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
முத்தூா், வள்ளியிரச்சல், மேட்டுப்பாளையம், வீரசோழபுரம், பச்சாபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, பசுபதிபாளையம், சுப்பிரமணியகவுண்டன்வலசு, வேலப்பநாயக்கன்வலசு, மோளக்கவுண்டன்வலசு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊரகப் பகுதிகளில் செம்மறி ஆடுகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சரிவர உணவு கிடைக்காமல் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கூட்டமாகச் சோ்ந்து மேய்ச்சல் காடுகள் மற்றும் பட்டிகளில் இருக்கும் ஆடுகளைக் கடித்துக் கொன்று வருவது தொடா்ந்து நடந்து வருகிறது.
ஒரு ஆடு பத்தாயிரம் ரூபாய் வரை விலை இருக்கும் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தெரு நாய்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களை அடித்து துன்புறுத்துவதோ, கொன்று விடுவதோ பிராணிகள் வதைப்பு தடை சட்டத்தின்படி மிகப்பெரிய குற்றமாக இருப்பதால், ஆடுகளை வளர்ப்போர் நாய்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி பகுதிகளில் கருத்தடை தடுப்பூசி போடப்படுகிறது. அதுபோல், தெருநாய்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க, தனியார் அமைப்புகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu