மூன்று கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

மூன்று கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
X

காங்கயத்தில், மூன்று கடைகளில் ஷட்டர் பூட்டுகளை உடைத்த மர்ம நபர்கள், பணத்தை திருடி சென்றனர். 

காங்கயம் அருகே, அடுத்தடுத்த இடங்களில், மூன்று கடைகளில் பூட்டை உடைத்து, ரூ..67 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

காங்கயம் நெய்க்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகார்த்திகேயன். நெய்க்காரன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்றுகாலை கடைக்கு வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது டிராவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள், திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் நெய்க்காரன்பாளையத்தை அடுத்துள்ள புதூர் பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியில், தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில், ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரமும், புதூர் பிரிவு அடுத்துள்ள ஆலாம்பாடி பஸ் ஸ்டாப் பகுதியில் சதீஸ்குமார் என்பவரது டூவீலர் ஒர்க்ஷாப்பில், பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து, கடை உரிமையாளர்கள் காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story
ai solutions for small business