முத்துாரில் 7 டன் விளைபொருட்கள் ஏலம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு உள்ளிட்ட 7 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.
நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 12 ஆயிரத்து 501 தேங்காய்களை (5441 கிலோ) ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.28.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.05-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 51 தேங்காய் பருப்பு மூட்டைகள் (1448 கிலோ) ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.69.15-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 6 ஆயிரத்து 194 தேங்காய்களும், 21 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக வரத்து இல்லாததால் எள் ஏலம் நடைபெறவில்லை.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 7 டன் அளவில் மொத்தம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 39-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மொத்த கொள்முதல் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu