அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவு

அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவு
X

காங்கயம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சொற்பொழிவு நடந்தது.

Tirupur News Today Tamil -நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம், காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை சார்பில், 'வாங்க பேசலாம்' என்ற மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பயிற்சியை நடத்தியது.

Tirupur News Today Tamil -இதில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் பன்முக ஆளுமை பற்றிய சிறப்பு சொற்பொழிவு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நசீம் ஜான் தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் தேவகி, கணிதவியல் துறை உதவி பேராசிரியர் குருசாமி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் நளினி, க.சிவக்குமார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கவுரி, அபிநயா சங்கீதா, சுவேகா, முத்துலட்சுமி, கவுசல்யா, கோமதி, ராமலட்சுமி, மாதவன், சஞ்சய், காயத்ரி, இலியாஸ் ஆகியோர் அறிஞர் அண்ணா வாழ்க்கை பயண நிகழ்வுகள் பற்றி கட்டுரை எழுதி வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவிகள் தனலட்சுமி, சாலினி, காயத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.முடிவில் கல்லூரி மாணவி லட்சுமி நன்றி கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!