காங்கயத்தில், விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கயத்தில், விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

Tirupur News- காங்கயத்தில் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அறிவுறுத்திய தீயணைப்புத்துறையினர். 

Tirupur News-காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீயணைப்பு நிலைய அதிகாரி மணிகண்டன் தலைமையில் காங்கயம் பஸ் ஸ்டாண்ட், கடைவீதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகை நேரங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags

Next Story