முத்தூரில் வேளாண் விளைப்பொருட்கள் ரூ. 3. 42 லட்சத்துக்கு ஏலம்
Tirupur News,Tirupur News Today- தேங்காய் உள்ளிட்ட விளைப்பொருட்கள் ஏலம் விடப்பட்டது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடந்து வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலனடைந்து வருகின்றனர்.
இதன்படி நேற்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 9 ஆயிரத்து 489 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடந்தது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ. 20. 70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 16. 75-க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 38 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75. 15-க்கும், குறைந்தபட்சமாக என ரூ. 55. 15-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. மேலும் முத்தூர் நகர சுற்றுவட்டார கீழ் பவானி பாசனப் பகுதியில் எள் அறுவடை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. இதன்படி சுற்றுவட்டார விவசாயிகள் 19 சிவப்பு ரக எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ எள் அதிகபட்ச விலையாக ரூ. 136. 90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 133. 90-க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1322 தேங்காய்களும், 31 தேங்காய் பருப்பு மூட்டைகளும் குறைவாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 7 டன் அளவில் மொத்தம் ரூ. 3 லட்சத்து 42 ஆயிரத்து 39-க்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
பருத்தி ரூ. 1.53 கோடிக்கு ஏலம்
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடந்தது.
இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 752 ேபர் பருத்தி கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் பருத்தியை கொள்முதல் செய்தனர். அதன்படி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,369-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.5,500-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1 கோடி 53 லட்சத்து 81 ஆயிரத்து 156-க்கு ஏலம் போனது.
இந்த தகவலை திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu