வெள்ளகோவில் பகுதியில், வெறிநாய் கடித்து மூன்று ஆடுகள் பலி

வெள்ளகோவில் பகுதியில், வெறிநாய் கடித்து மூன்று ஆடுகள் பலி
X

வெள்ளகோவில் அருகே, வெறிநாய் தொல்லை அதிகரிப்பதால், ஆடுகளை காக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளகோவில் அருகே வெறி நாய் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தது.

முத்துார், பாரவலசு ஓடக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சிவசாமி. 52 விவசாயி. இவர் தான் வளர்த்து வந்த ஆறு ஆடுகளை வீட்டின் வெளியே கட்டிவைத்துவிட்டு, வீட்டுக்குள் துாங்க சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்து பார்த்தபோது வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்துக் கொண்டு இருந்தது. அவர் சத்தமிட்டதால், நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.

வெறிநாய் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தது. காயமடைந்த ஆடுகளுக்கு அரசு கால்நடை டாக்டர் சுரேஷ் சிகிச்சை அளித்தார். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ 50 ஆயிரம் எனவும், இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், இப்பகுதியில் திரியும் வெறி நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
why is ai important to the future