அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு தடுக்கக் கோரி சப்- கலெக்டரிடம் புகார்

அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு  தடுக்கக் கோரி சப்- கலெக்டரிடம் புகார்
X

அமராவதி ஆற்றில் தண்ணீர் திருடுவதை தடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவையிளர் தாராபுரம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அமராவதி ஆற்றில் நடைபெற்று வரும் தண்ணீர் திருட்டு தடுக்கக் கோரி சப்- கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பெரமியம் அருகே அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திருடுவதை தடுக்கக் கோரி ஆதித்தமிழர் பேரவை கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தாராபுரம் சப்- கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவில், தாராபுரம் பெரமியம் அருகே அரசுக்கு சொந்தமான தார்சாலை எந்தவித அனுமதியும் பெறாமல் தோண்டப்பட்டுள்ளது.

மேலும் 10- க்கும் மேற்பட்ட குழாய்கள் அமராவதி ஆற்று நீரை திருடி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட் உள்ளதாக தெரிகிறது.

பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வகையில் உயர் மின் அழுத்த கேபிள்களும் பதிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த நேரத்திலும் மின்கசிவு ஏற்பட்டு பேராபத்தை ஏற்படுத்தி பல உயிர்களை காவுவாங்க வாய்ப்பு உள்ளது.

எனவே இதுகுறித்து தாங்கள் உரிய விசாரணை செய்து அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!