குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா

குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா
X

குண்டடம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதுாரில், மரக்கன்று நடும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, தலைமை வகித்தார். இதில் புங்கை, வேம்பு, புளியன், சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

|அத்துடன், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை முறையாக பராமரித்து, வளர்ப்பது என, இந்த நிகழ்வின்போது உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராஜ், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி, ஊராட்சி செயலாளர் ரூபிகா, பணித்தள பொறுப்பாளர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!