தொழில் முனைவோர் திட்டத்தில் மீன் வளர்க்க விண்ணப்பிக்கலாம் - திருப்பூர் கலெக்டர் தகவல்

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை: தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் வகையில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்பு. தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியும், மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்சவரம்பு 1 கோடியே 25 லட்சம்; ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும், மொத்த மதிப்பீட்டில் மானியத் தொகை உச்சவரம்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், வரும் 31 ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
இதில் விருப்பமுள்ளவர்கள், நல்லதங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரம் என்ற முகவரியில் இயங்கும் மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரம் அறிய, 04242221912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu