தாராபுரம் பகுதியில் அதிக லாபம் தரும் சூரியகாந்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம்
பைல் படம்.
தாராபுரம் பகுதி மழையளவு மிகவும் குறைவான பகுதியாகும். இதனால் இப்பகுதி விவசாயிகள் வெங்காயம் தவிர வறட்சியை தாங்கும் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, முருங்கை போன்ற பயிர்களையே தங்கள் வயல்களில் பயிரிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் குறைந்த அளவு தண்ணீரில் பலன் தரும் சூரியகாந்தி பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து தாராபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது: தாராபுரம் பகுதி மிகவும் வறட்சியான பகுதி ஆகும். நான் எனது தோட்டத்தில் சூாியகாந்தி பயிா் செய்து உள்ளேன். 90 நாள் பயிரான சூாியகாந்திக்கு நடவு முதல் அறுவடை வரை 5 முறை தண்ணீா் பாய்ச்சினாள் போதுமானது. 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீா் விட வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை என 2 முறை உரம் இட வேண்டும். இதற்கு விதை, நடவுக்கூலி. உரம், களைக் கொல்லி, அறுவடை உட்பட ஏக்கருக்கு சுமாா் 15 ஆயிரம் வரை செலவு ஆகிறது. அறுவடை முடிவில் இதன் விதை கிலோ ரூ.35 முதல் 45 க்கு விலை போகிறது. ஒரு ஏக்காில் 900 முதல் ஆயிரம் கிலோ வரை விதை கிடைக்ககும். இதன் மூலம் செலவுகள் போக விவசாயிகள் சுமாா் 25 ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெற முடியும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu