குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: அகற்றக்கோரி பெண் தர்ணா போராட்டம்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை:  அகற்றக்கோரி பெண் தர்ணா போராட்டம்
X

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தாராபுரத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

குடிமகன்கள் சிலர் தகாத வார்த்தையால் திட்டியதால் ஆந்திரமடைந்த பெண் டாஸ்மாக் கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பஸ் ஸ்டாண்டு வடபுறம் உள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

டாஸ்மாக் கடையில் மது வாங்கும் மதுப்பிரியர்கள், அண்ணா நகருக்கு செல்லும் ரோட்டில் அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறியதும், அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதுடன், தகாத வார்த்தையால் பேசுகின்றனர்.

ஒரு சில குடிமகன்கள் மது குடித்து விட்டு, ரோட்டில் நிர்வாண நிலையில் படுத்து விடுகின்றனர். இதனால் பெண்கள், பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செல்வராணி என்பவர் இன்று டாஸ்மாக் கடை வழியாக சென்றபோது, குடிமகன்கள் சிலர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனால் ஆந்திரமடைந்த அவர் டாஸ்மாக் கடை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, டாஸ்மாக் கடை முன் அமைக்கப்பட்டுள்ள தடுப்புவேலி அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த தாராபுரம் போலீசார், வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு அப்பெண் அங்கிருந்து சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!