தாராபுரத்தில் தொடரும் மழை: நாற்று நடவு துவக்கம்

தாராபுரத்தில் தொடரும் மழை: நாற்று நடவு துவக்கம்
X

தாராபுரம் பகுதியில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

தாராபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நாற்றுநடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணை நீரை மையமாக வைத்து, திருப்பூர் மற்றும் கரூரில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுகிறது. உடுமலை பகுதியில் பெய்யும் மழையால், அமராவதி அணை முழு கொள்ளளவான, 90 அடியை எட்ட உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது.

தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அலங்கியம், கோவிந்தபுரம், சத்திரம், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளயைம் உட்பட பல பகுதிளைச் சேர்ந்த விவசாயிகள், நீர் வரத்து இருப்பதால், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்ய தயாராகியுள்ளனர். அதற்காக நாற்றாங்கால் தயார்படுத்தும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!