தாராபுரத்தில் ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் ஃபைன்
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறுகட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 3௦௦௦ சதுரஅடிகள் மேலுள்ள துணிக்கடைகள் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் கம்ப்யூட்டர் சென்டர் செல்போன் கடைகள் மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடைவீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைகள் திறக்கப்பட்டு இன்று காலையில் இருந்து வியாபாரம் நடந்தது. இது குறித்து தாராபுரம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீஸார் பார்த்த போது,கடையின் முன்பகுதி பூட்டப்பட்டு இருந்தது. ஆனால், கடையின் பின்பகுதி வழியாக வாடிக்கையாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்ததனர்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 30க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியும் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடையை பூட்டினர். இதேபோல், தாராபுரம் நகர் பகுதியில் விதிமுறையை பின்பற்றாமல் இருந்த 4கடைகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu