தாராபுரத்தில் பழுதான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

தாராபுரத்தில் பழுதான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
X

தாராபுரத்தில் பழுதான மின்கம்பம்.

தாராபுரம் சிவசக்தி நகரில் பழுதான மின்கம்பத்தை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்டது சிவசக்தி நகர் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளன. இப்பகுதியின் முக்கிய சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் அடிப்பாகம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. தற்போது காற்று, மழை காரணமாக திடீரென விழும் நிலையில் உள்ளது. பழுதான மின் கம்பத்தை அகற்ற கோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!