மோடி பிறந்தநாள்: தாராபுரம் அருகே பாஜக சார்பில் கண்சிகிச்சை முகாம்

மோடி பிறந்தநாள்: தாராபுரம் அருகே  பாஜக சார்பில் கண்சிகிச்சை முகாம்
X

தாராபுரம் அருகே தொப்பம்பட்டி ஊராட்சி, வரப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம்

முகாமில் மொத்தம் 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 40 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் பிரதமர் மோடியின் பிறந்தநாளைமுன்னிட்டு இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

தாராபுரம் அருகே தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமை, பாஜக திருப்பூர் மாவட்ட தலைவர் பொன் ருத்ரகுமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், இளைஞரணி தலைவர் யோகிஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்தனர். மொத்தம் 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 40 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி வைத்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!