கிடப்பில் தாராபுரம்–உடுமலை நெடுஞ்சாலை: பணியை துவங்க கோரிக்கை

கிடப்பில் தாராபுரம்–உடுமலை நெடுஞ்சாலை: பணியை துவங்க கோரிக்கை
X

தாராபுரம்–உடுமலை நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளதால் மண் ரோடாக காட்சி அளிக்கிறது.

திடீரென கிடப்பில் போடப்பட்ட தாராபுரம்–உடுமலை நெடுஞ்சாலை பணியை துவங்க மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உடுமலை–தாராபுரம் நெடுஞ்சாலையில் சிவசக்திகாலனி முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இதற்காக ரோட்டில் இருந்த சென்டர் மீடியன் அகற்றப்பட்டது. விரிவாக்கத்திற்காக ரோட்டின் பக்கவாட்டில் குழித்தோண்டி ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

இப்பணி திடீரென கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, விரிவாக்கத்திற்காக கொட்டப்பட்ட கான்கீரிட் கலவைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பல இடங்களில் ரோடு குழியாக காணப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் நகர் பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு வாகனங்கள் அதி வேகமாக செல்கிறது. வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரோட்டில் சென்டர் மீடியன் வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!