கூடுதல் மகசூலுக்கு திரவ உயிர் உரம்: தாராபுரம் விவசாயிகளுக்கு அட்வைஸ்
ரசாயன உர பயன்பாடால் மண் வளம் பாதிக்கப்படுகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இதை தவிர்க்க, திரவ உயிர் உர பயன்பாட்டை வேளாண்மை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அவினாசியில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, உற்பத்தி நடந்து வருகிறது.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத திரவ உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அவை, 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வகை உரங்களை பயன்படுத்துவதன் மூலம், உரங்களின் செலவு குறைவதோடு, மண் வளம் பாதுகாக்கப்படும். 10 முதல், -25 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu