தாராபுரம் அருகே காற்றாலையில் தீ விபத்து; ரூ.80 லட்சம் மதிப்பு மின் சாதனம் சேதம்

தாராபுரம் அருகே காற்றாலையில் தீ விபத்து; ரூ.80 லட்சம் மதிப்பு மின் சாதனம் சேதம்
X

தாராபுரம் அருகே காற்றாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காற்றாலை இறக்கைகள் புகை மூட்டமாக உள்ளது.

தாராபுரம் அருகே காற்றாலையில் ஏற்பட்டத்தில் தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பு மின் சாதனங்கள் சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோவிந்தபுரம், சத்திரம், தாசர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், தாசர்பட்டியில் உள்ள ஒரு காற்றாலையில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதில், இரண்டு இறக்கைகள் தீயில் எரிந்து கருகியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

இதில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான காற்றாலை இயந்திரங்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business