தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 59-வது பிறந்தநாள் விழா
தேமுதிக.,தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா தாராபுரத்தில் கொண்டாடப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த விழா, திருப்பூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தாராபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். தாராபுரம், மூலனூர், கன்னிவாடி, பொன்னாபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், குண்டடம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேமுதிக கொடி ஏற்றி பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் . தாராபுரம் அண்ணா சிலை அருகே தேமுதிக கழக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 38முதியோர்களுக்கு மதிய உணவும், பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. மாவட்ட கழக துணைச் செயலாளர் தாளக்கரை அண்ணாதுரை, மாவட்டக் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் பொன்னாபுரம் நவநீதகிருஷ்ணன், அலங்கியம் பெரியசாமி ராஜா மணி மற்றும் நாகராஜ் உள்பட 100க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu