தாராபுரம் வருகை தந்த சக்தி ரதம்: பக்தர்கள் வழிபாடு
சக்தி ரதத்தை வழிபட்ட பக்தர்கள்.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு, சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் அழைத்து வரப்பட்டது. தென்கரை பெரிய காளியம்மன் கோவில் முன்பு வைத்து ரதத்தின் பயணம் தொடங்கியது.
பொதுமக்கள் தரிசனத்திற்காக அம்மன் சிலை வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தாங்களாகவே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சினைகளும், தோஷங்களும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிகழ்வில், ராஜா என்கின்ற கோவிந்தசாமி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில இணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்ன குமரவேல், கோவை மாவட்ட இணைப்பாளர் ஆனந்த், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் திருமலைசாமி. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தாராபுரம் ஒன்றிய பூசாரி பேரவை அமைப்பாளர் அம்பிகாவதி,இணை அமைப்பாளர் நாச்சிமுத்து,மாவட்ட இணை அமைப்பாளர் ராமலிங்கம் உட்பட, பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu