தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
X

பைல் படம்.

தாராபுரம் நகராட்சியில் 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் அமைந்துள்ளன. நகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரி வசூல் மற்றும் இதர வரி வசூல் நடக்கிறது. இது தவிர, நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் டெண்டர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில், இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பணியாளர்களிடம் இருந்த ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு