தாராபுரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

தாராபுரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அலிங்கியம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் கவுதம், 19,. இவர் அதே பகுதியில் ஒரு தனியார் செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

அங்கு புணிபுரியும் வடமாநில பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் பெரும் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அலங்கியம் பகுதியில் கவுதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்கியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil