தாராபுரத்தில் கொலை வழக்கில் 4 பேர் கைது

தாராபுரத்தில் கொலை வழக்கில் 4 பேர் கைது
X

பைல் படம்.

தாராபுரத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி மீனாட்சி 40. இவர், கடந்த 16 ம் தேதி தனது 3மகன்களுடன் வரதராஜ் பெருமாள் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோனிஷ் 18, சதீஷ்18, சந்துரு 20, கவின் 18 ஆகிய நான்கு பேரும், மீனாட்சி மீது விழுவது போல் நடனமாடினர். இதனால் மீனாட்சி அவர்கள் 4 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், இதை பார்த்த உறவினர் சுப்பிரமணி 31, அவர்களிடம் தட்டிக் கேட்டார். சமாதானமாகிய பிறகு, சுப்பிரமணி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றபோது, நான்கு வாலிபர்களும் சுப்பிரமணியை வழிமறித்து தகறாறு செய்ததோடு, தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த சுப்பிரமணி மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அலங்கியம் போலீஸார், 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!