ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை- முதல்வர்

ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை- முதல்வர்
X

நூறு நாளில் குறைகளை தீர்ப்பேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியதாவது:- திமுக வினர் திட்டமிட்டே தமிழக அரசு மீது வீண் பழி சுமத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஸ்டாலின் ஊர் ஊராய் போய் பெட்சீட்டை போட்டு உட்கார்ந்து வருகிறார். மனுவை பெட்டிக்குள் வாங்கி போட்டு 100 நாட்களில் அதை தீர்ப்போம் என்பது பெரிய ஏமாற்று வேலை.

உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆட்சியில் இருந்த போது ஏன் குறைகளை தீர்க்கவில்லை. ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறாராம். திமுக ஆட்சியில் மின் வெட்டு இருந்தது. அதனை தற்போது மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். அதன் விளைவாக உலக தொழிலதிபர்கள் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்