திருப்பூரில் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய நூறு படுக்கை வசதி கொண்ட கொரோனா கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தன்னார்வலர்கள் உதவியுடன் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வசதியுடன் செயல்படக்கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா கூடுதல் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார்.
சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வசதியாக கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் , செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் , வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ,ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu