பண மோசடி குறித்து மரண வாக்குமூலம் அளித்த பெண் தற்கொலை

பண மோசடி குறித்து மரண வாக்குமூலம்  அளித்த பெண் தற்கொலை
X
பண மோசடி தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் மரண வாக்குமூலம் அளித்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி, வேட்டுவபாளையம் கிராமம், அ.குரும்பபாளையம் பகுதியில் வசித்தவர் ஷீலாதேவி, 36. இவரது கணவர் பொன்னுசாமி; 9 வயதில் மகள் உள்ளார். கடந்த, 13ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், தனது மகளுடன் சென்ற ஷீலாதேவி, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அவர் 'மரண வாக்குமூலம்' எனக்குறிப்பிட்டு, ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், குரும்பபாளையத்தில், 45 சென்ட் நிலம் எங்களுக்கு இருந்தது. தொழில் மேம்பாட்டுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வகையில், திருப்பூரை சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் எனது நிலத்தை வைத்து பணம் வாங்கினேன். அந்நிலத்தை விற்பனை செய்த வகையில் எனக்கு வர வேண்டிய, 60 லட்சம் ரூபாயை அவர் தராமல் இழுத்தடித்து வருகிறார். அந்த பணத்தை பெற்றுத்தர வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை, தனது வீட்டில் விஷமருந்தினார். ஆபத்தான நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு காரணமான, சிவராஜ், கதிர்வேல் ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது