அவிநாசியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் அதிகாரி கைது

அவிநாசியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் அதிகாரி கைது
X
அவிநாசியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் ரோட்டில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகம் செயல்படுகிறது. மின் இணைப்பு பெற, இந்த அலுவலகத்தில் பொது மக்கள் விண்ணப்பிக்கப்படுகிறது. திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கவுரி. இவர், அவிநாசி ராக்கியாபாளையத்தில் வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த 8 ம் தேதி விண்ணப்பித்தார்.

மின் இணைப்பு தொடர்பாக உதவி மின் பொறியாளராக தில்ஷத்பேகம், 36, என்பவரை அணுகினார். அப்போது, 2000 லஞ்சம் கொடுத்தால், மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய உதவி பொறியாளர் கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கவுரி, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ரசாயன பவுடர் கலந்த ரூபாய் நோட்டை கவுரியிடம் கொடுத்து அனுப்பினர். அவிநாசி மின்வாரிய அலுவலகம் சென்ற கவுரி, மின்வாரிய பொறியாளர் தில்ஷத்பேகத்திடம், பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் ஆகியோர் உள்ளே சென்று தில்ஷத்பேகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india