புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
X

புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கிராமசபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி பிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நம்பியம்பாளையத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வர, எங்கள் பகுதியில் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லை. தூரமாக உள்ளதால், வஞ்சிபாளையம் ஆர்எஸ், மேற்கு வஞ்சிபாளையம், பொன்ராமபுரம், முருகம்பாளையம், சாமந்தன் கோட்டை, வெங்கமேடு பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் எங்கள் பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா