திருப்பூர் மாவட்டத்தில் செப். 12ல் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் செப். 12ல் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம்
X
திருப்பூர் மாவட்டத்தில், வரும் 12 ம் தேதி, மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 631 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இது தொடர்பாக, திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கடந்த 2 அலைகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்களை நோயின் தாக்கத்தில் இருந்து பாதுக்கும் வகையில் முதல் அமைச்சரின் அறிவுரைப்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்.12 ம் தேதி மெகா முகாம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 ஆகும். இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 708 பேர் முதல் தவணையும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 647 பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இன்னும் 10 லட்சத்து 18 ஆயிரத்து 391 பேருக்கு முதல் தவணையும், உரிய காலக்கெடு முடிந்த 43 ஆயிரத்து 187 பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்த வேண்டி உள்ளது.

செப்.,12 ம் தேதி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 631 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, டோல்கேட், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இப்பணிக்கு பல்வேறு துறைகளை சார்ந்த 2 ஆயிரத்து 480 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil