திருப்பூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனம்

திருப்பூர் மாவட்ட பாஜக  நிர்வாகிகள் நியமனம்
X
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜக மாநில தலைவர் முருகனின் வழிகாட்டுதலின்படி, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் ஒப்புதலுடன், திருப்பூர் மாவட்ட செயற்குழு, மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக அவிநாசி மேற்கு பழனிசாமி, வாணி மகேஸ்வரி, கருவம்பாளையம் சுதாதேவி, செரங்காடு திவ்யா அருண், திருமுருகன்பூண்டி சுவாமிநாதன், பல்லடம் நகர் திலீப், பல்லடம் வடக்கு வெள்ளியங்கிரி, பொங்கலூர் கிழக்கு சண்முகசுந்தரம், பொங்கலூர் கிழக்கு துரைசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தொழில்பிரிவு மாவட்ட துணை தலைவர்களாக, செராங்காடு சிவக்குமார், திருப்பூர் தெற்கு விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளராக கருவம்பாளையம் சரத்குமார் ஆகியோரும், அறிவுசார் பிரிவு பொங்கலூர் மேற்கு மாவட்ட துணைத்தலைவராக பாலகிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவராக சந்துரு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future