ஊத்துக்குளியில் 2 பஸ்கள் மோதல் - காயமின்றி தப்பிய பயணிகள்

ஊத்துக்குளியில்  2 பஸ்கள் மோதல் - காயமின்றி தப்பிய பயணிகள்
X
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பஸ் நிறுத்தத்தில், ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, பின்னால் திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வந்து நின்றது.

பின்னர், பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் போது, அரசு பேருந்தை தனியார் பேருந்து முந்தி செல்ல முயன்றது. அப்போது பேருந்தின் பக்கவாட்டில் தனியார் பேருந்து, பயங்கரமாக மோதியது. இதில், அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதியும், தனியார் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தன. கண்ணாடிகள் நொறுங்கின.

அத்துடன், அரசு பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்