அவிநாசி அருகே கருவலூர் கடையில் திருட்டு

அவிநாசி அருகே கருவலூர் கடையில் திருட்டு
X
அவிநாசி அருகே கருவலூர் மெயின் ரோட்டில் உள்ள கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து கருவலூர் மெயின்ரோட்டில் கடை நடத்தி வருபவர் தங்கவேல். சம்பவத்தன்று இரவு, இவர் தனது கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றார். பின்னர் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது, அதன் பலகை கதவு , பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.

கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business