பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த  தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X
அவிநாசி பகுதியில் குடிபோதையில், 12வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்த 34 வயதான நபர், டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்தாண்டு, ஜூலை 30ம் தேதி, குடிபோதையில் இருந்த அந்நபர், தனது 12 வயது மகளை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, அவரது மனைவி, அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீ்சார், அந்நபரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், அந்நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அந்நபர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!