அவினாசியில் திடீர் மழை: நெரிசலில் சிக்கி தவித்த மக்கள் அவதி

அவினாசியில் திடீர் மழை: நெரிசலில் சிக்கி தவித்த  மக்கள் அவதி
X

அவினாசியில் திடீரென பெய்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவிநாசியில் இன்று மாலை திடீரென மழை பெய்ததால் மக்கள் நெரிசலில் திக்கு முக்காடினர்.

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவினாசியில் இன்று மாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. புதிய பேருந்து நிறுத்த பகுதியிலுள்ள கடைகளில், அதிகளவில் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.

இதற்கிடையில், மழையும் பெய்ததால் நெரிசல் ஏற்பட்டு, மக்கள் திக்குமுக்காடினர். துணிக்கடைகளில், அதிகளவு மக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால் தொற்று அபாயம் ஏற்பட்டது. அவினாசி காவல்துறையினர் சார்பில், சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நடமாடும் படி, ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.

Tags

Next Story
the future of ai in healthcare