அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்

அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்
X

பைல் படம்.

சிறு விவசாயி சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் செப்.,30 ம் தேதி நடைபெற உள்ளதாக அவிநாசி தோட்டக்கலை துறை சார்பில் அறிவிப்பு.

அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்து உள்ளதாவது: வாழை, மஞ்சள், மரவள்ளி அனைத்து வகை காய்கறி பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு செப்.,30 ம் தேதி தாண்டுகாரன்பாளையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விஏஓ., அலுவலகத்தில் காலை 10 மணிக்கு முகாம் துவங்குகிறது. சொட்டு நீர் பாசனத்தில் பயன்பெற விரும்புவோர் சிறு குறு விவசாயியாக இருந்தால் இ–சேவை மையத்தில் பதிவு செய்து, ஒப்புகை சீட்டுடன் சிட்டா,அடங்கல், பத்திர நகல், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வில்லங்க சான்று, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7667690259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai marketing future