பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவிநாசியில் ஏலம்

61 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் ஆகியவை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரத்து 950க்கு ஏலம் விடப்பட்டது.

அவினாசி மதுவிலக்கு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்தி சென்றதாக, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாசங் சாய் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது. அவினாசி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 61 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 1 மூன்று சக்கர வாகனம் ஆகியவை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரத்து 950 - க்கு ஏலம் விடப் பட்டதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!