அரைகுறை வேலையால் விபரீதம்: சாலையோர குழியில் கவிழ்ந்தது கார்

அரைகுறை வேலையால் விபரீதம்: சாலையோர குழியில் கவிழ்ந்தது கார்
X

அவினாசி – மேட்டுப்பாளையம் ரோட்டில், சாலையோரம் கவிழ்ந்த கார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் பயணித்து கொண்டிருந்த கார், கட்டுப்பாடிழந்து கவிழ்ந்தது.

ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் தீபக், 35. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், தனது காரில், அவினாசி, மேட்டுப்பாளையம் வழியாக, நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தார். கருவலுார் நரியம்பள்ளிபுதுார் அருகே சென்ற போது, சாலையோரம் இருந்த குழியில், கார் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்.

அவினாசி காவல்துறையினர், கவிழ்ந்த காரை மீட்க உதவினர். காவல் துறையினர் கூறுகையில்,'இந்த சாலையின் ஓரத்தில், அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிக்காக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழி, சரியாக மூடப்படாததால், கார் நிலைத்தடுமாறி, விபத்தை எதிர்கொண்டது,' என்றனர். சாலை முறையாக செப்பனிடாததால் விபத்து ஏற்பட்டது, வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்