திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளமாக மாறிய சாலை

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளமாக மாறிய சாலை
X

குடிநீர் குழாய் உடைப்பால் குளம்போல் தேங்கிய நீர்.

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அவினாசி – சேவூர் சந்திப்பு சாலையின் முகப்பில், நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோக குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கான இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கு இக்குழாய் வழியாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் வெளியேறுவதால் சாலை அரிக்கப்பட்டு குழியாகவே மாறி வருகிறது. இப்பகுதியில் பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. ஏராளமான மக்கள் நடமாடுகின்றனர். குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வழிந்தோடி கடைகளின் முன் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலையில் தேங்கும் தண்ணீரால் குளமாக மாறி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!