ராகுல் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்

ராகுல் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்
X

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, குன்னத்தூரில் நலத்திட்ட உதவிகளை, மாவட்ட தலைவர் ஜி.ராஜன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவை, நலத்திட்ட உதவிகளை வழங்கி, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா, பொதுமக்களுக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியாக குன்னத்தூர், செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்எம் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். செங்கப்பள்ளி பகுதியில் வட்டாரத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் சர்வேஸ்வரன் தலைமையில், குன்னத்தூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் சிவக்குமார், ஈஸ்வரமூர்த்தி, அக்கினி பாலு, ரவி குமார், பாலாஜி, பிரபு, சிவகிரி வாசு கணேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!