அவினாசி அருகே தண்ணீருக்கு மறியலில் ஈடுபட்ட மக்கள்

அவினாசி அருகே தண்ணீருக்கு மறியலில் ஈடுபட்ட மக்கள்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

அவினாசி அருகே, குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் கஞ்சப்பள்ளி ஊராட்சியில், நீலகண்டன் புதுார், கஞ்சபள்ளி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த நான்கு மாதங்களாக பவானி ஆற்று நீர் சப்ளை செய்யப்படவில்லை. கடந்த ஐந்து நாட்களாக போர்வெல் நீரும் வினியோகம் இல்லை என அப்பகுதி மக்கள் கூறி வந்தனர்.

இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று அன்னுார்- அவிநாசி நெடுஞ்சாலையில், நீலகண்டன் புதுார் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் கிராம மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

கிராம மக்கள் கூறுகையில், 'ஊராட்சி தலைவரிடம் பலமுறை நேரில் தெரிவித்தும், ஆற்று நீர் சப்ளை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழாய் உடைப்பால், போர்வெல் நீரும் தடைபட்டுள்ளது. கிணற்றில் மிக மோசமான தண்ணீர் உள்ளது. அந்த நீரை தான் சப்ளை செய்கின்றனர் என்றனர். 'உடனடியாக போர்வெல் நீர் சப்ளை செய்யப்படும். ஆற்று நீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai in biotech and healthcare