பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட எதிர்த்து பொது மக்கள் போராட்டம்

அவிநாசி அருகே பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கணியாம்பூண்டி மற்றும் ராக்கியாபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் பாறைகுழி உள்ளது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இங்குள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதால், மக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu