அவிநாசி கோவில் தேரோட்டம்: பக்தர்களிடம் நாளை கருத்துக்கேட்பு

அவிநாசி கோவில் தேரோட்டம்: பக்தர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
X

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம், நாளை, 16ம் தேதி நடத்தப்பட உள்ளது.

பிரசித்தி பெற்ற, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேரோட்டம், அடுத்த மாதம், 5ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேரோட்டத்தை வழக்கமாக நடத்தப்படும் பகல் நேரத்தில் நடத்த வேண்டும் என பலரும், மாலையில் நடத்த வேண்டும் என சிலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேரோட்ட நாட்கள் மற்றும் நேரம் குறித்து, பக்தர்களிடம் கருத்துக்கேட்பு நடத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை, 16ம் தேதி, முற்பகல், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கருத்து தெரிவிக்க விரும்பும் பக்தர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!