பகுதி நேர ரேஷன் கடை முழு நேரமானது!

பகுதி நேர ரேஷன் கடை முழு நேரமானது!
X

செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

அவினாசி அருகே, பகுதி நேர ரேஷன் கடை, முழு நேர கடையாக செயல்பட துவங்கியது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்துக்குட்பட்ட செம்பியநல்லுார் ஊராட்சி எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இக்கடையை முழு நேர கடையாக மாற்ற வேண்டும் என, 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ மக்கள் மனு வழங்கியதன் அடிப்படையில், பகுதி நேரமாக செயல்பட்டு வந்த ரேஷன் கடை, முழுநேர கடையாக மாற்றப்பட்டு, இன்று முதல் செயல்பட துவங்கியது. இந்நிகழ்ச்சியில் அவிநாசி ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சிவபிரகாஷ், தலைமை வகித்தார். செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா, முன்னிலை வகித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!