மைசூரூ மாணவி பலாத்காரம் ; அவிநாசியில் 4 பேரை கைது செய்த போலீஸார்

மைசூரூ மாணவி பலாத்காரம் ; அவிநாசியில் 4 பேரை  கைது செய்த போலீஸார்
X
கூட்டு பலாத்கார சம்பவம், கர்நாடகா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, போராட்டமும் வெடிக்க துவங்கியது.

கர்நாடக மாநிலம், மைசூருவில் மாணவி கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் மைசூரில் எம்பிஏ படிக்கும் 23 வயது மாணவி ஒருவர், தன் காதலுடன் கடந்த 24 -ஆம் தேதி சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், காதலனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு சென்றது.

காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கூட்டு பலாத்கார சம்பவம், கர்நாடகா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, போராட்டமும் வெடிக்க துவங்கியது. இதனால் கர்நாடகா மாநில போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவ நடந்த இடத்தில் செல்போன் டவர் மூலம் கர்நாடகா போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் 6 பேர் கொண்ட இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக, ஈரோடு மாவட்டம், தாளவாடி, சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பூபதி(28 )போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவல் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேயூர் பகுதியை சேர்ந்த கருவேங்காடு முருகேசன் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


Tags

Next Story
ai in future agriculture