ஊத்துக்குளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஊத்துக்குளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
X

ஊத்துக்குளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் நலத்திட்ட உதவி வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியினர் சார்பில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், அவிநாசி வட்டாரத்தில் காமராஜர் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் மக்கள்ஜி ராஜன் தலைமையில், காமராஜரின் 119வது பிறந்தநாள் வெகு விமர்சியாக அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஊத்துக்குளியில் நடந்த விழாஇல், கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். ஊத்துக்குளி தெற்கு பழனிச்சாமி, ஊத்துக்குளி வடக்கு சர்வேஸ்வரன் ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், மாவட்ட பொருளாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture