அவினாசியில் அடுத்தடுத்து சிக்கும் சட்ட விரோத 'பார்கள்'

அவினாசியில் அடுத்தடுத்து சிக்கும் சட்ட விரோத பார்கள்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், அடுத்தடுத்து சிக்கும், சட்ட விரோத ‘பார்’களால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 14 'டாஸ்மாக்' மதுகடைகள் உள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட கடைகளை ஒட்டி, 'பார்'கள் செயல்படுகின்றன. சில நாட்களுக்கு முன், அவினாசி போலீசார் நடத்திய ஆய்வில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக செயல்பட்ட, மூன்று 'பார்' உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவினாசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் நடத்திய ஆய்வில், கருவலுார் 'டாஸ்மாக்' கடையை ஒட்டி, அனுமதியின்றி பார் செயல்படுவது தெரிய வந்தது. கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவர் மீது, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை ஜாமினில் விடுவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!