வெள்ள அபாய எச்சரிக்கை: உஷார்படுத்தும் தீயணைப்புத்துறை
அவிநாசியில் ஆற்றோர மக்களுக்கு அவினாசியில் தீயணைப்புத்துறையினர் வெள்ள அபாய விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினர்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அவினாசி தீயணைப்புத்துறையினர் சார்பில், ஆற்றோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மத்தியில், விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
அவிநாசி நல்லாற்றை ஒட்டியுள்ள காசிகவுண்டம்புதுார், சீனிவாசபுரம், பெருமாநல்லுாரில் பாரதிநகர், முட்டியகிணறு ஆகிய இடங்களில் உள்ள ஆற்றோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களிடம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கூறியதாவது:
வெள்ளம் செல்லும் வழித்தடத்தில் கழிவுப்பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளை போடக்கூடாது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், தங்கள் உடமைகளுடன் மேடான பகுதிக்கு சென்றுவிட வேண்டும். நீரோட்டம் உள்ள வெள்ள நீரில் இறங்கி நடக்கக் கூடாது. வெள்ளத்திலோ, அதன் அருகிலேயோ சிறுவர்களை விளையாட அனுமதிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu