அவிநாசி அருகே நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக மான் பலி

அவிநாசி அருகே நாய்கள் கடித்து  குதறியதில் பரிதாபமாக மான் பலி
X

அவிநாசி அருகே நாய்கள் கடித்தில் பலியான மான்

அவிநாசி அருகே நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக மான் பலியானது.

அவிநாசி பகுதியில் அடிக்கடி மான்கள் உணவு தேடி வருகின்றன. இதேபோல், அவிநாசி மங்கலம் ரோட்டு ஓரத்தில் மான்கள் உணவு தேடி வந்தது. அப்போது, ஒரு பெண் மானை, அங்கு சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய்க்கள் விரட்டியது. மான் மிரண்டு ஓடியதால், நாய்க்கள் விரட்டி சென்று கடித்து குதறியது. மானின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்து குதறியதால், மான் பரிதாபமாக இறந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று, பிரேத பரிசோதனை செய்து, மானை அடக்கம் செய்தனர்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!