வஞ்சிப்பாளையம் பள்ளியில் கொரோனா கேர் சென்டர்- தன்னார்வலர்கள் ஏற்பாடு
X
அவிநாசி அருகே, வஞ்சிப்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கேர் சென்டர்.
By - Reporter - TIRUPUR |1 Jun 2021 9:05 AM IST
அவிநாசி அருகே, வஞ்சிப்பாளையத்தில் தன்னார்வலர்களின் முயற்சியால், கொரோனா சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள், இம்மையத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 25 சதவீதத்துக்கும் கீழ் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளில் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், புதுப்பாளையம் ஊராட்சி, ரோட்டரி சங்கம், நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வஞ்சிப்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு , செயல்பாட்டில் உள்ளது. இங்கு தற்போது, 6 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து, ஊராட்சித் தலைவர் கஸ்தூரி பிரியா பாலசந்திரன் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு, எங்கள் பஞ்சாயத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம், ரோட்டரி சங்கம், நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வஞ்சிபாளையம் உயர்நிலைப்பள்ளியில் 20படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 5 பெட் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் அல்லது பஞ்சாயத்து தலைவர் மூலம் தகவல் தெரிவித்து, சேவூர் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து அனுமதி சீட்டு பெற்று, இங்கு வந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம். இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலம் 3 வேளை சத்தான உணவு, கபசுரக்குடிநீர், பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu